நெல்லையில், தி.மு.க. இலக்கிய அணி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி
நெல்லையில், மத்திய மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி நேற்று நடந்தது.
நெல்லை,

பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி
மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. இலக்கிய அணி சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் நெல்லை சந்திப்பில் உள்ள ம.தி.தா.இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு இலக்கிய அணி அமைப்பாளர் கொம்பையா பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட இலக்கிய அணி தலைவர் சுப்பிரமணியன், துணை அமைப்பாளர் ராஜா, மாநகர இலக்கிய அணி தலைவர் சஞ்சய்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நவுசாத் வரவேற்று பேசினார்.
மாவட்ட செயலாளர் மு.அப்துல்வகாப் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் லட்சுமணன் எம்.எல்.ஏ., தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் கவிஞர் மூர்த்தி, பொறியாளர் அணி அமைப்பாளர் செல்வபிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து போட்டி நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு காலையிலும், மதியம் கல்லூரி மாணவர்களும் தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது.
மாணவர்களுக்கு பரிசு
போட்டி முடிவில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், இரண்டாவது பரிசு பெற்ற மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரமும், மூன்றாவது இடத்தை பிடித்த மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 3–ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

Related Tags :
Next Story