மஞ்சமலைசாமி ஆற்றுத்திடலில் கோவில் திருவிழாவையொட்டி எருதுகட்டு விழா
பாலமேட்டில் கோவில்திருவிழாவையொட்டி மஞ்சமலைசாமி ஆற்றுத்திடலில் எருதுகட்டு விழா நடைபெற்றது.
அலங்காநல்லூர்,
பாலமேட்டில் வடக்கு தெரு பொது மகா சபைக்கு பாத்தியப்பட்ட அய்யனார், கருப்புசாமி கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆடி திருவிழா நடைபெற்றது. இதில் முதல்நாள் வாணவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க பட்டத்து குதிரையுடன் சுவாமிகள் எடுத்து வரப்பட்டன.
அன்று இரவு கிராமமக்கள் கோவில்கள் முன்பு பொங்கல் வைத்து சாமிகளுக்கு படைத்தனர். தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் அய்யனார், கருப்புசாமி கோவில்களுக்கு அந்தந்த சாமிகள் புறப்பாடாகி இருப்பிடம் சேர்ந்தனர். இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமிகளை தரிசனம் செய்தனர்.
மறுநாள் கோவில்திருவிழாவையொட்டி பாலமேட்டில் உள்ள மஞ்சமலைசாமி ஆற்றுத்திடலில் எருதுகட்டு விழா நடந்தது. இதில் கோவில்காளைகள் உட்பட 19 காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக வடம் பூட்டிய கோவில் காளைகள் வலம் வந்தன. இவற்றை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.
அதைத்தொடர்ந்து வந்த காளைகள் வடம் பூட்டிய நிலையில் சீறிப்பாய்ந்தன. எருதுகட்டு விழாவை காண சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக வந்திருந்தனர்.
விழா ஏற்பாடுகளை பாலமேடு வடக்கு தெரு பொது மகாசபை சங்கத்தினர்களும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பாலமேடு போலீசாரும் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story