புகையிலை பொருட்கள் விற்பனை; ஒருவர் கைது


புகையிலை பொருட்கள் விற்பனை; ஒருவர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2017 3:15 AM IST (Updated: 6 Aug 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஒருவர் கைது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்தனர். விசாரணையில் அவர் திருவள்ளூர் இந்திராகாந்தி சாலையை சேர்ந்த சங்கர்(வயது 55) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் கோணிப்பையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். 

Next Story