திருச்சியில் பெண் காவலர் பணிக்கான உடற்திறன் தேர்வில் 677 பேர் பங்கேற்பு


திருச்சியில் பெண் காவலர் பணிக்கான உடற்திறன் தேர்வில் 677 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 6 Aug 2017 4:30 AM IST (Updated: 6 Aug 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் நடந்த பெண் காவலர் பணிக்கான உடற்திறன் தேர்வில் 677 பேர் பங்கேற்றனர்.

திருச்சி,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறை வார்டன், தீயணைப்பாளர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கு அடுத்த கட்டமாக உடல் தகுதி தேர்வு கடந்த 27-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சியில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தேர்வு நடந்து வருகிறது.

இதில் ஆண் மற்றும் பெண்களுக்கு 2 கட்டங்களாக உடல் தகுதி தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. இதில் தேர்வானவர்களுக்கு அடுத்தக்கட்ட உடற்திறன் தேர்வு தொடங்கியது. ஆண்களுக்கு 2 நாட்கள் நடந்து முடிந்த உடற்திறன் தேர்வில் 1,310 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர் களுக்கு இனி மருத்துவ பரிசோதனை நடைபெறும்.

இதேபோல் பெண்களுக்கான உடற்திறன் தேர்வு நேற்று ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இதில் பங்கேற்க 686 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதில் 677 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், கிரிக்கெட் பந்து எறிதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். 

Related Tags :
Next Story