மது குடிக்க பணம் கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


மது குடிக்க பணம் கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2017 3:45 AM IST (Updated: 6 Aug 2017 1:17 AM IST)
t-max-icont-min-icon

மது குடிக்க பணம் கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

வாரியங்காவல்,

ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அழகுதுரை (வயது 35). தொழிலாளி. இவரது மனைவி கலைச்செல்வி (31). அழகுதுரை தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் நேற்றும் அவர் மது குடிப்பதற்காக கலைச்செல்வியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு கலைச்செல்வி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதில் ஆத்திர மடைந்த அழகுதுரை, கலைச்செல்வியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கலைச்செல்வி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் தினந்தோறும் அழகுதுரை, தன்னிடம் மது குடிப்பதற்காக தன்னை அடித்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story