அ.தி.மு.க.வினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது அமைச்சர் உதயகுமார் பேட்டி
புதிய நிர்வாகிகள் அறிவிப்பு அ.தி.மு.க.வினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை,
தமிழக வருவாய்த்துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவை மாநில செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் நேற்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் என்ற பெயரில் 18 அமைப்பு செயலாளர்கள், ஜெயலலிதா பேரவைக்கு இணை மற்றும் துணைச்செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நிர்வாகிகளை டி.டி.வி.தினகரன் அறிவித்திருக்கிறார். இந்த நடைமுறை என்பது இது வரை நாங்கள் பார்த்திராத ஒன்று. நான் பேரவை செயலாளராக பணியாற்றி வருகிறேன்.
நிர்வாகிகள் நியமனம் என்பது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இருந்த போது பட்டியல் வரும். அதில் அந்த செயலாளர்களின் பரிந்துரை கடிதங்களை பெற்று சிறப்பாக பணியாற்றுகின்ற நிர்வாகிகளுக்கு வாய்ப்பு தரலாம் என்று நாங்கள் பரிந்துரை செய்வோம். அதை ஜெயலலிதா விசாரித்து புதிய நிர்வாகிகளை அறிவிப்பார். அது நமது கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வலுவான அடித்தளமாக இருக்கும்.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் திறமையானவர்கள் தான். கட்சிக்காக உழைத்தவர்கள் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அறிவிக்கப்பட்ட முறை தான் தவறானது. நன்றாக செயல்படுகின்ற நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் மத்தியில் நகைப்புக்குரியதாகவும் இந்த அறிவிப்பு உள்ளது. பதவி என்பதை கேலிக்கூத்தாக்கி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் முறைப்படி பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் ஆகியோரை இன்னும் அங்கீகரிக்கவில்லை. மேலும் தேர்தல் ஆணையத்தில் உள்ள பட்டியலில் அவர்கள் பெயர்கள் இடம் பெறவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட, பொதுச்செயலாளர் யார் என்ற கேள்விக்கு பதில் இல்லை, அது விசாரணையில் உள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் புதிய நிர்வாகிகள் நியமனம் யாரை முன்னிலைப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டது? இதுகட்சி வளர்ச்சிக்கு ஒரு போதும் உதவாது. புதிய நிர்வாகிகள் பட்டியில் உள்ளவர்கள் கட்சிக்காக உழைத்தவர்கள் தான். தியாகம் செய்தவர்கள் தான். ஆனால் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், சத்யா பன்னீர்செல்வம் போன்றவர்கள் பொறுப்புகளை ஏற்க மறுத்து விட்டனர்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. இயக்கத்தில் கிளை செயலாளர் பதவியை கூட ஒருவர் மறுத்ததாக இது வரை வரலாறு இல்லை. நிர்வாகி ஒருவர் நியமிக்கப்பட்டு விட்டால் கட்சி பத்திரிகையில் பக்கம், பக்கமாக விளம்பரம் வரும். நிர்வாகிகள் அணிதிரண்டு வந்து சால்வை அணிவித்து வாழ்த்துவார்கள். ஆனால் இப்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் யாருக்கும் உடன்பாடு இல்லை என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது.
புதிய நிர்வாகிகள் அறிவிப்பு அவசர கோலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் என்ன? நன்றாக செயல்பட்டு வரும் கழகத்தை முடக்கவா என்று கேள்வி தான் எழுந்துள்ளது.
நன்றாக செயல்பட்டு வரும் ஆட்சியிலும், கட்சியிலும் குழப்பத்தையே இது ஏற்படுத்தும். தனிநபர்களை முன்னிலைப்படுத்த அறிவிக்கப்படும் அறிவிப்பாக இருக்கும். பதவி கொடுப்பதில் நடைமுறையை பின்பற்றி அறிவிக்க வேண்டும் என்பது தான் எங்கள் கருத்து. தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாத. கட்சி நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளாத, பொதுமக்கள் எள்ளி நகையாடுகின்ற நிலையைத் தான் இந்த அறிவிப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
இதனை எப்படி கட்சியின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவாக எடுத்துக் கொள்ள முடியும். கட்சி, சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு வந்த பின்னர் தான் புதிய நிர்வாகிகளை நியமிக்க முடியும் என்று 1½ கோடி தொண்டர்களுக்கும் தெரியும். ஆனால் நம்மை தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்காத நிலையில் தற்போது பொறுப்பு பற்றிய அறிவிப்புக்கு எந்த தேவையும் ஏற்படவில்லை.
தேர்தல் ஆணையமும் இந்த புதிய நிர்வாகிகளை அங்கீகரிக்காது. தற்போது உள்ள நிலையில் அ.தி.மு.க. இணைப்பு தான் முக்கியம். எனவே அதற்கான முயற்சியில் நாங்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story