ஓய்வூதியர்கள் சங்கத்தினர் குடை பிடித்தபடி நூதன போராட்டம்


ஓய்வூதியர்கள் சங்கத்தினர் குடை பிடித்தபடி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2017 4:15 AM IST (Updated: 6 Aug 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வூதியர்கள் சங்கத்தினர் குடை பிடித்தபடி நூதன போராட்டம்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை காவல்துறையினரை கண்டித்தும், சென்னையில் நடைபெற்ற ஜாக்டே-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் குடை பிடித்தபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெகன்நாதன் தலைமை வகித்தார். போராட்டத்தை ஆதரித்து போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மாவட்டச் செயலாளர் இளங்கோ, பள்ளி கல்லூரி ஆசிரியர் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கந்தசாமி நன்றி கூறினார். 

Related Tags :
Next Story