செங்கம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு விவசாயி சாவு


செங்கம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு விவசாயி சாவு
x
தினத்தந்தி 6 Aug 2017 4:15 AM IST (Updated: 6 Aug 2017 1:35 AM IST)
t-max-icont-min-icon

செங்கம் அருகே டெங்கு காய்ச்சலால் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

செங்கம்,

செங்கம் அருகே புதுப்பாளையத்தை அடுத்த ஜி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 39), விவசாயி. இவர் கடந்த 15 நாட்களாக தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். பின்னர் அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல் டெங்கு காய்ச்சலால் கடந்த 3-ந் தேதி செங்கம் நீப்பத்துறை அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் தனஞ்செழியன் என்பவரது மகள் சுஜாதா (வயது 10) என்ற 5-ம் வகுப்பு மாணவியும் உயிரிழந்தார். இவர்கள் உள்பட செங்கம் பகுதியில் இதுவரை 4 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். மேலும் செங்கம் பகுதி மக்கள் டெங்கு பீதியில் உள்ளனர்.

எனவே, சுகாதாரத்துறையினர் டெங்கு பாதித்த செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காய்ச்சல் உள்ளவர்களை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Tags :
Next Story