பாரதிதாசன் கவிதைகள் ஒப்புவிக்கும் போட்டி தி.மு.க. இலக்கிய அணி சார்பில் நடந்தது


பாரதிதாசன் கவிதைகள் ஒப்புவிக்கும் போட்டி தி.மு.க. இலக்கிய அணி சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 6 Aug 2017 4:00 AM IST (Updated: 6 Aug 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பாரதிதாசன் கவிதைகள் ஒப்புவிக்கும் போட்டி தி.மு.க. இலக்கிய அணி சார்பில் நடந்தது

திருச்சி,

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று திருச்சி மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பாரதிதாசன் கவிதைகள் ஒப்புவிக்கும் போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த போட்டிகளுக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் மனோகரன், மாநகர அமைப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என்ற வீதத்தில் பரிசுகளும் மற்றும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கிறார்கள். 

Next Story