துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வெங்கையா நாயுடுவுக்கு ரங்கசாமி வாழ்த்து


துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வெங்கையா நாயுடுவுக்கு ரங்கசாமி வாழ்த்து
x
தினத்தந்தி 6 Aug 2017 3:31 AM IST (Updated: 6 Aug 2017 3:31 AM IST)
t-max-icont-min-icon

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுவுக்கு புதுவை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, 

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுவுக்கு புதுவை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கையா நாயுடு நல்ல அரசியல் அனுபவம் உடையவர். மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். அவரது பணி சிறக்க அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பிலும், எனது சார்பிலும், புதுச்சேரி மக்கள் சார்பிலும், வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

Next Story