நிலம் வாங்கி தருவதாக ரூ.8 கோடி மோசடி கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு 5 ஆண்டு ஜெயில்


நிலம் வாங்கி தருவதாக ரூ.8 கோடி மோசடி கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு 5 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 6 Aug 2017 4:12 AM IST (Updated: 6 Aug 2017 4:12 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த விலைக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.8 கோடி மோசடியில் ஈடுபட்ட கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

குறைந்த விலைக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.8 கோடி மோசடியில் ஈடுபட்ட கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ரூ.8 கோடி மோசடி


மும்பை மேற்குபுறநகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 39). கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் லாட்டரி ஏஜென்சியும் நடத்தி வந்தார். இவருக்கு கடந்த 2008-ம் ஆண்டு சிவில் என்ஜினீயர் ஒருவர் அறிமுகம் ஆனார்.

அவரிடம், பிரவீன் மகாடாவில் தனக்கு பல அதிகாரிகளை தெரியும் என்றும், குறைந்த விலைக்கு மகாடாவில் இருந்து நிலம் வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். இதை உண்மையென நம்பிய சிவில் என்ஜினீயர் தனக்கு நிலம் வாங்கி தருமாறு கூறி, பிரவீனிடம் ரூ.8 கோடி வரை கொடுத்தார். ஆனால் அவர் சொன்னது போல நிலம் வாங்கி கொடுக்கவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி தரவில்லை.

5 ஆண்டு ஜெயில்


இதுகுறித்து சிவில் என்ஜினீயர் கடந்த 2015-ம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஜோதிடரான மகேஷ்குமாரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பை கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் பிரவீன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். எனவே வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி பிரவீனுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். ஜோதிடர் மகேஷ்குமார் மீதான விசாரணை கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வருகிறது.

Next Story