ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் கத்தி முனையில் நகை, பணம் பறிப்பு
ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த நகை, பணம், செல்போனை பறித்த பெண் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை,

ஆட்டோவில் பயணம்
மும்பை பாந்திராவை சேர்ந்த பெண் மன்னாபி சேக் (வயது58). இவர் சம்பவத்தன்று இரவு தகிசரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். இதற்காக போரிவிலி ரெயில் நிலையத்தில் இருந்து தகிசருக்கு ஷேர் ஆட்டோவில் ஏறினார். ஆட்டோ சிறிது தூரம் சென்றவுடன் பெண் உள்பட 2 பேர் ஆட்டோவில் ஏறினர். இந்த நிலையில் ஆட்டோ திடீரென வழக்கமாக செல்லும் பாதையில் செல்லாமல் வேறு வழியாக சென்றது. வழக்கம்போல செல்லும் வழியில் செல்லுமாறு மன்னாபி சேக் ஆட்டோ டிரைவரிடம் கூறினார்.
நகை, பணம் பறிப்பு
ஆனால் அதை பொருட்படுத்தாத டிரைவர், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் ஆட்டோவை நிறுத்தினார். பின்னர் அவர் மற்றும் ஆட்டோவில் இருந்த மேலும் 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி மன்னாபி சேக்கிடம் இருந்த நகை, பணம் மற்றும் செல்போனை பறித்தனர்.
பின்னர் அவரை தகிசர் செக்நாக்காவில் இறக்கி விட்டு 3 பேரும் ஆட்டோவில் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மன்னாபி சேக் சம்பவம் குறித்து கஸ்தூர்பா மார்க் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story