ரூபாய் நோட்டில் இருக்கும் படங்கள்
பணம்! இன்றைய உலகில் பலரது முகத்தில் தவழும் சந்தோஷத்திற்கும், கண்களில் வடியும் கண்ணீருக்கும், மனதில் நொறுங்கிக் கிடக்கும் கனவுகளுக்கும் பெரும் காரணியாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஒரே காகிதக்கருவி.
பணம்! இன்றைய உலகில் பலரது முகத்தில் தவழும் சந்தோஷத்திற்கும், கண்களில் வடியும் கண்ணீருக்கும், மனதில் நொறுங்கிக் கிடக்கும் கனவுகளுக்கும் பெரும் காரணியாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஒரே காகிதக்கருவி. ஒவ்வொரு மாதமும் முதல் நாள் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள், மாதத்தின் கடைசி வேலை நாளில் ஊதியம் வாங்கும் ஐ.டி. வாசிகள், எப்போது வரும் என்றே தெரியாமல் காத்துக்கிடக்கும் தினக்கூலிகள் என பலதரப்பட்ட மக்களும் அவரவர் கையில் தவழும் பணத்தாளின் பின்னால் அச்சிடப்பட்டிருக்கும் படங்களின் தகவல் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. நம்மில் சிலர் அதைப் பற்றி அறிந்து கொள்ள சிறிதும் சிந்தித்திருக்க மாட்டோம். அந்தப் படத்தின் விவரம் பற்றி இப்போது பார்க்கலாம்.
ஒரு ரூபாய்த் தாளின் பின்னால் இருக்கும் எண்ணெய் கிணறு தொழில்துறை வளர்ச்சி முன்னேற்றத்தை குறிக்கிறது. 2 ரூபாய்த் தாளில் இருக்கும் செயற்கைக் கோள் மிக பிரபலமான ஆர்யபட்டா செயற்கைக் கோள் படமாகும். இது அறிவியல்-தொழில்நுட்பத்தை குறிக்கிறது. 5 ரூபாய்த் தாளில் இருக்கும் டிராக்டர் மற்றும் விவசாய நிலமானது விவசாயத்தை குறிக்கிறது. (இந்த மூன்று வகை ரூபாய் நோட்டுகளையும் தற்போது கண்ணால் காண்பதே அரிது). பரவலாக தாராளமாக புழங்கும் 10 ரூபாய்த் தாளில் இருக்கும் பல விலங்கினங்கள் இந்திய நாட்டின் பல்லுயிர் வளத்தை காட்டுகின்றன.
20 ரூபாய்த் தாளில் இருக்கும் பனை மரங்கள், மவுண்ட் ஹாரிட் லைட் ஹவுஸ், போர்ட் பிளேரிலிருந்து தெரியும் காட்சியாகும். 50 ரூபாய்த் தாளில் இருப்பது இந்திய பாராளுமன்ற வளாக படமாகும். இது இந்திய ஜனநாயகத்தை குறிக்கிறது. 100 ரூபாய்த் தாளில் இருக்கும் படம் மவுன்ட் கஞ்சன்ஜங்கா. இது இந்தியாவின் உயர்ந்த மலைச் சிகரம் ஆகும். பழைய 500 ரூபாய்த் தாளில் இருந்த படம் காந்தி உப்பு சத்தியாகிரகம் செய்த போது சென்ற தண்டி யாத்திரை படமாகும். புதிய 500 ரூபாய்த் தாளில் இருப்பது டெல்லியிலுள்ள செங்கோட்டை படமாகும். பழைய ஆயிரம் ரூபாய்த் தாளில் இருந்த படம் இந்திய பொருளாதாரத்தை முழுக்க காண்பிக்கும் குறியீடு. புதிய 2ஆயிரம் ரூபாய்த் தாளில் இருப்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் இலச்சினையாகத் திகழும் சந்திரயான் ராக்கெட்டின் படமாகும்.

Related Tags :
Next Story