அஞ்சலியின் அதிசய ஓட்டம்
உலகின் நீளமான மராத்தான் போட்டிக்களம் என வர்ணிக்கப்படும் தென்னாப்பிரிக்காவின் காம்ரேட்ஸ் மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு சாதித்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றிருக்கிறார், அஞ்சலி சரோகி.
உலகின் நீளமான மராத்தான் போட்டிக்களம் என வர்ணிக்கப்படும் தென்னாப்பிரிக்காவின் காம்ரேட்ஸ் மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு சாதித்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றிருக்கிறார், அஞ்சலி சரோகி. டர்பன் மற்றும் பீட்டர்மாரிட்ஸ்பர்க்கின் நகரங்களுக்கிடையே உள்ள 89 கிலோ மீட்டர் தூரத்தை முழுமையாக கடந்து ‘பில் ரவுடன்’ என்ற பதக்கத்தையும் வென்றிருக்கிறார்.
அஞ்சலி முழுநேர தடகள வீராங்கனை அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ஓட்டப்பந்தயங் களில் பங்கேற்க தொடங்கி இருக்கிறார். அவருடைய 18 வயதான மகள் மம்தா, மும்பையில் நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்குமாறு அஞ்சலியை ஊக்கப்படுத்தி இருக்கிறார். உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்பட்ட அஞ்சலிக்கு ஓட்ட பயிற்சி பெறும் ஆர்வம் இருந்திருக்கிறது. அதனால் மகளின் கோரிக்கைக்கு செவி சாய்த்து மராத்தானில் பங்கேற்றவர், முழுமையாக பந்தயத்தை பூர்த்தி செய்து பரிசு வென்றிருக்கிறார். அதற்கு கிடைத்த வரவேற்பு சர்வதேச மராத்தான் போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
“பொதுவாகவே பெண்கள் தங்களை தாங்களே குறைத்து மதிப்பீடு செய்து கொள்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் பயம்தான் அதற்கு காரணம். பயத்தை போக்கி நம்பிக்கையை அதிகப்படுத்திக்கொண்டால் நிச்சயம் சாதிக்கலாம். கனவோடு வாழ்வதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டும். எனக்குள் முதலில் பயம் இருக்கத்தான் செய்தது. அதனை போக்கியதால்தான் சாதிக்க முடிந்தது” என்கிறார், அஞ்சலி.
மும்பை மராத்தான் பந்தயம் கொடுத்த ஊக்கம் சர்வதேச ஓட்டபந்தயங்களில் பங்கேற்கும் உத்வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. சிகாகோவில் நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்கு கடும் பயிற்சி எடுத்திருக்கிறார். அப்போது மோசமான சாலைகளில் அவர் மேற்கொண்ட பயிற்சி காயங்களை ஏற்படுத்தி கடும் துயரங்களுக்கு ஆளாக்கிவிட்டது.
“சிகாகோ மரத்தான் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதே என் லட்சிய கனவாக இருந்தது. அதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து படுகாயமடைந்து விட்டேன். என்னால் இனி முன்புபோல் ஓட இயலாது என்று டாக்டர்கள் கூறி விட்டனர். அது எனக்கு மிகுந்த மனவேதனையை கொடுத்தது. அந்த சமயத்தில் அமித் சேகத் என்பவர் எழுதிய புத்தகம் ஒன்றை நண்பர்கள் எனக்கு பரிசாக கொடுத்தனர். அவர் 2009-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடந்த காம்ரேட்ஸ் மராத்தான் போட்டியை முழுமையாக நிறைவு செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர். அவரது புத்தகம் காயத்தை கடந்து போராட என்னை ஊக்குவித்தது” என்கிறார்.
சிகிச்சைக்கு பிறகு படிப்படியாக உடல்நலம் தேறியவர் தன்னம்பிக்கையுடன் ஓட்டப்பந்தய பயிற்சி பெற்று, காம்ரேட்ஸ் மராத்தானில் கலந்து கொண்டதோடு போட்டியை முழுமையாக நிறைவு செய்த முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுவிட்டார்.
“ஆரம்பத்தில் என் தந்தை மற்றும் கணவர் ஆகியோர் என் உடல்நலம் குறித்து மிகவும் கவலை கொண்டனர். ஆனால் என்னுடைய உறுதியான மனநிலையை பார்த்த பிறகு ஊக்குவிக்கத் தொடங்கி விட்டார்கள். நான் குழந்தை பருவத்தில் குண்டாக இருந்தேன். அது என் உடல் நலனுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாக உணர்ந்தேன். உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிக்க ஓட்டப்பந்தயம் எனக்கு கைகொடுக்கிறது” என்கிறார்.
தன் மகளோடு சேர்ந்து மீண்டும் காம்ரேட்ஸ் மராத்தானில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் அஞ்சலியின் லட்சியமாக இருக்கிறது.

Related Tags :
Next Story