ஆசை வார்த்தைகள் கூறி கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் கைது
குளச்சல் அருகே ஆசை வார்த்தைகள் கூறி கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
குளச்சல்,
குளச்சல் அருகே உள்ள கல்லுக்கூட்டம் வெள்ளங்கட்டி தெருவை சேர்ந்தவர் மதன்குமார் (வயது22). இவருக்கும் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவி நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்கு செல்லும் போது மதன்குமார் அடிக்கடி அவரை சந்தித்து பேசினார். இந்த பழக்கம் காதலாக மாறியது.
இந்தநிலையில் இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால், அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மதன்குமாரை சந்திக்கக் கூடாது என்று அவர்கள் கண்டித்தனர். மேலும், கல்லூரிக்கு செல்லவும் அந்த மாணவிக்கு தடை விதித்தனர். இதைத் தொடர்ந்து, மதன்குமார் அந்த மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத போது சென்று அவரை சந்தித்து பேசினார்.
அப்போது மாணவியை வெளியே அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் மாணவியிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். அத்துடன், புறக்கணிக்க தொடங்கினார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி அழுதார். மேலும், இதுபற்றி குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வாலிபர் மதன்குமாரை கைது செய்தார். பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Tags :
Next Story