ஒப்புக்கொள்ளும் மனநிலை சகிப்புத்தன்மையை விட ஒரு படி மேலானது துணை ஜனாதிபதி பேச்சு
ஒப்புகொள்ளும் மனநிலை சகிப்புத்தன்மையை விட ஒரு படி மேலானது என்று துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கூறினார்.
பெங்களூரு,
ஒப்புகொள்ளும் மனநிலை சகிப்புத்தன்மையை விட ஒரு படி மேலானது என்று துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கூறினார்.
தேசிய குடிமகன்இந்திய பல்கலைக்கழக தேசிய சட்டப்பள்ளியின் 25–வது பட்டமளிப்பு விழா பெங்களூரு பி.இ.எஸ். கல்லூரியில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
ஒப்புக்கொள்ளும் மனநிலை சகிப்புத்தன்மையை விட ஒரு படி மேலானது. இது நமக்குள் தொடங்கும் பயணத்தின் ஆரம்ப கட்டம். ஆதிதிராவிடர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இடையே உள்ள ஒரு கவலையை நீக்க ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வது முக்கியமானது. நாகரிகத்துவம் என்பது தேசிய மக்கள் என்பதை விட தேசிய குடிமகன் எனும் சிந்தனையை கொண்டது.
ஒப்புக்கொள்ளும் மனநிலைபன்முகத்தன்மையே அரசியல் சாசனத்தின் ஜனநாயகம் சார்ந்த ஆட்சி நிர்வாகம் மற்றும் மதசார்பற்ற நாடு என்பதை கொண்டுள்ளது. பன்முகம் என்பது தார்மிக மாண்புகளை கொண்டுள்ளது. மதசார்பற்ற கொள்கையின் அடிப்படை தத்துவங்களான சமத்துவம், மத சுதந்திரம், சகிப்புத்தன்மை ஆகியவற்றுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டியுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். சகிப்புத்தன்மையை பலமாக ஆதரிக்க வேண்டும். பரஸ்பர புரிதல் மற்றும் ஒப்புக்கொள்ளும் மனநிலை அவசியம். பன்முக ஜனநாயகத்தில் இவற்றுக்கு ஏதாவது குறை ஏற்படுத்தும் முயற்சியை நாமே தடுக்க வேண்டும்.
இவ்வாறு ஹமீது அன்சாரி பேசினார்.
15 தங்க பதக்கங்களை பெற்றார்விழாவில் கலந்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும், இந்திய பல்கலைக்கழக தேசிய சட்டப்பள்ளியின் வேந்தருமான ஜெகதீஷ்சிங் கேஹர் மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். மாணவி சுருதி அசோக் என்பவர் 15 தங்க பதக்கங்களை பெற்றார். இந்த விழாவில் கவர்னர் வஜூபாய் வாலா, முதல்–மந்திரி சித்தராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.