மூத்தமகள் காதல் திருமணம் செய்ததால் வேதனை: ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
சேலம் அருகே மூத்த மகள் காதல் திருமணம் செய்ததால் வேதனை அடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம்,
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தாண்டானூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50), விவசாயி. இவருடைய மனைவி ராணி (45). இவர்களுக்கு மேனகா (21), ஆர்த்தி (19) ஆகிய 2 மகள்களும், நவீன்குமார் (16) என்ற மகனும் இருந்தனர்.
இவர்களில் மேனகா பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு அரசு பணி எழுத்து தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். 2-வது மகள் ஆர்த்தி சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நவீன்குமார், ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
வாழப்பாடி அருகே உள்ள பெரியகவுண்டாபுரத்தை சேர்ந்தவர் மகாதேவன். இவருடைய மகன் மணிகண்டன் (23), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த சில ஆண்டுகளாக ராஜேந்திரனின் வீட்டுக்கு பாக்கு மட்டை ஏற்ற ஆட்டோவில் அடிக்கடி வந்துள்ளார். இதில் மேனகாவுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த தகவல் மேனகாவின் பெற்றோருக்கு சமீபத்தில் தெரியவந்தது. அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், மகளை கண்டித்து அறிவுரையும் கூறி உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி அதிகாலையில் மேனகா வீட்டை விட்டு வெளியேறி, தனது காதலன் மணிகண்டனுடன், ஈரோடு மாவட்டம் கவுண்டம்பாளையத்திற்கு சென்றார். அங்குள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட இந்த காதல் ஜோடி, அன்று மதியம் துலுக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.
அதன்பிறகு தாண்டானூருக்கு திரும்ப வந்தால், தங்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று கருதிய இந்த காதல் ஜோடியினர் நேற்று முன்தினம் காரிப்பட்டி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இது ஒருபுறம் இருக்க தனது மகள் காணாமல் போனதை அடுத்து பல்வேறு இடங்களில் ராஜேந்திரன் தேடி வந்தார். இந்த நிலையில் அவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 20 பேருடன் சேர்ந்து ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்து மகள் காணாமல் போனது குறித்து புகார் கொடுத்தார்.
அதன்பேரில், ஏத்தாப்பூர் போலீசார் விசாரணையை தொடங்கியபோது, காரிப்பட்டி போலீசார் மேனகா காதல் திருமணம் செய்து கொண்டு போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த தகவலை ஏத்தாப்பூர் போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து காரிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த செல்லுமாறு ராஜேந்திரன் குடும்பத்தினரை ஏத்தாப்பூர் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
தங்கள் பேச்சை கேட்காமல் மகள் இவ்வாறு செய்து விட்டாளே, இனிமேல் ஊருக்குள் நாங்கள் எப்படி வாழமுடியும் என்று ராஜேந்திரனும், அவருடைய மனைவி ராணியும் உடன் வந்த உறவினர்களிடம் அழுதுபுலம்பினர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய உறவினர்கள் காலையில் பேசி நல்ல முடிவு எடுக்கலாம் என்று கூறி, நள்ளிரவு 12 மணியளவில் அவர்களை வீட்டுக்கு கொண்டு சென்று விட்டனர்.
மறுநாள் காலையில் மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு பேச்சுவார்த்தைக்கு சென்றால் தங்கள் குடும்ப மானம் போய் விடுமே என்று மிகுந்த கவலை அடைந்த ராஜேந்திரன், தனது மனைவி, 2-வது மகள் மற்றும் மகனிடம் இது தொடர்பாக உருக்கமாக பேசி உள்ளார். இனிமேல் வாழ்வதைவிட நாம் 4 பேரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வோம் என்று அப்போது ராஜேந்திரன் கூறி உள்ளார்.
இதையடுத்து, வீட்டில் வைத்திருந்த விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை (விஷம்) தண்ணீரில் கலந்து அவர்கள் 4 பேரும் குடித்து விட்டனர். பின்னர், ராணியும், அவருடைய 2-வது மகள் ஆர்த்தியும் ஒரு கட்டிலிலும், ராஜேந்திரனும், நவீன்குமாரும் தனித்தனியாக மற்ற 2 கட்டில்களிலும் படுத்தனர். தொடர்ந்து அவர்கள் வாயில் நுரைதள்ளிய நிலையில் பரிதாபமாக இறந்து விட்டனர்.
இதனிடையே, நேற்று காலையில் உறவினர் கலா என்பவர் ராஜேந்திரனின் வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டு கதவு பூட்டாமல் இருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது அவர்கள் 4 பேரும் தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், ஏத்தாப்பூர் போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் மாலையில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரின் உடல்களையும் தாண்டானூர் சுடுகாட்டில் உறவினர்கள் தகனம் செய்தனர். இந்த சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மூத்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் வேதனையடைந்த விவசாயி தனது மனைவி, மகள், மகனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story