பெட்ரோலிய ரசாயன மண்டலம் திட்டத்தை பா.ம.க. அனுமதிக்காது அன்புமணி ராமதாஸ் பேச்சு
பெட்ரோலிய ரசாயன மண்டலம் திட்டத்தை பா.ம.க. ஒருபோதும் அனுமதிக்காது என்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
சீர்காழி,
நாகை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதன் ஒரு பகுதியாக சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-
இந்த பெட்ரோலிய ரசாயன மண்டலம் வந்தால் அந்த பகுதி அழிந்துவிடும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 45 கிராமங்களை சேர்ந்த மக்கள் அகதிகளாக இடம் பெயரும் நிலை வரக்கூடும். நிலங்களை கையகப்படுத்தி ஒட்டுமொத்த மண் வளத்தினை பாழாக்கும் இத்திட்டத்தினை பா.ம.க. ஒருபோதும் அனுமதிக்காது. இந்த திட்டத்தினை அரசாணை வெளியிட்டு ரத்து செய்யும் வரை தொடர்்ந்து போராடுவோம். மேற்குவங்காளம், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மக்களின் கடும் எதிர்ப்பால் இத்திட்டம்் கைவிடப்பட்டது. ஆனால் மூன்று போகமும் செழுமையாக விளையும் டெல்டா மாவட்டங்களில் அமைந்தால் விவசாயம் அழிந்து பாலை வனமாகும்.
ராமநாதபுரத்தில் ஆயிரக்கணக்கான தரிசு நிலங்கள், சீமைகருவேலமரங்கள் நிறைந்த மக்கள் வசிக்க முடியாத அப்பகுதியில் இந்த திட்டத்தினை செயல்படுத்தட்டும். உலகத்திலேயே எங்கும் அமைக்காத மிகப்பெரிய பெட்ரோலிய ரசாயன திட்டம் இது. இத்திட்டத்திற்கு பிள்ளையார்சுழி போட்டு அனுமதியளித்தது தி.மு.க. தான். பா.ம.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்தால் முதல் ஒரு வாரத்தில் ஓ.என்.ஜி.சி.யை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story