நவிமும்பையில் பிச்சை எடுக்கும் சிறுமி காரில் கடத்தி கற்பழிப்பு டிரைவர் கைது


நவிமும்பையில் பிச்சை எடுக்கும் சிறுமி காரில் கடத்தி கற்பழிப்பு டிரைவர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2017 3:31 AM IST (Updated: 7 Aug 2017 3:30 AM IST)
t-max-icont-min-icon

நவிமும்பையில் பிச்சை எடுக்கும் சிறுமியை காரில் கடத்தி கற்பழித்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

நவிமும்பையில் பிச்சை எடுக்கும் சிறுமியை காரில் கடத்தி கற்பழித்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பிச்சை எடுக்கும் சிறுமி

நவிமும்பை வாஷி 9–ம் எண் செக்டரில் உள்ள ஒரு இனிப்பு கடை அருகே சம்பவத்தன்று இரவு 14 வயது சிறுமி தனது 5 வயது தம்பியுடன் பிச்சை எடுத்து கொண்டிருந்தாள். அப்போது அங்கு காரில் ஒரு வாலிபர் வந்தார். அவர் ரூ.500 தருவதாக கூறி தன்னுடன் வரும்படி சிறுமியை அழைத்தார். உடனே சிறுமியையும், அவனது தம்பியையும் காரில் ஏறினர்.

கற்பழிப்பு

துர்பே பகுதிக்கு அவர்களை அழைத்து சென்ற அந்த வாலிபர், அங்கு சிறுவனை ஒரு இடத்தில் நிற்க வைத்து விட்டு, மறைவான இடத்திற்கு சிறுமியை அழைத்து சென்று மிரட்டி கற்பழித்து உள்ளார். அப்போது திடீரென சிறுமி ரத்தப்போக்கு ஏற்பட்டு உள்ளது.

இதனால் பயந்து போன அந்த வாலிபர் அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டார். இந்த நிலையில், சிறுவன் தனது அக்காவை வாஷி ரெயில் நிலையத்திற்கு வந்து உள்ளான்.

டிரைவர் கைது

அங்கு பயணிகள் சிறுமியின் உடையில் ரத்தம் படிந்திருப்பதை பார்த்து வாஷி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியிடம் விசாரித்தனர். இதில் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதாள். இதையடுத்து போலீசார் சிறுமி பிச்சை எடுத்து கொண்டிருந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதில் நவிமும்பையை சேர்ந்த சுற்றுலா கார் டிரைவர் தார்மானா (வயது25) என்பவர் அவளை கடத்தி கற்பழித்து இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story