மும்பை – புனே நெடுஞ்சாலையில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து தீ விபத்து 5 பேர் காயம்

மும்பை – புனே நெடுஞ்சாலையில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து தீ விபத்து 5 பேர் காயம்
x
தினத்தந்தி 7 Aug 2017 3:38 AM IST (Updated: 7 Aug 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

மும்பை – புனே நெடுஞ்சாலையில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் காயமடைந்தனர்.

மும்பை,

மும்பை – புனே நெடுஞ்சாலையில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் காயமடைந்தனர்.

லாரி கவிழ்ந்து தீ விபத்து

ராய்காட் மாவட்டம் போகர்பாடா அருகே மும்பை – புனே நெடுஞ்சாலையில் நேற்று காலை பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது. அப்போது டேங்கரில் இருந்த பெட்ரோல் கசிந்தது. இதனால் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது டேங்கர் லாரியின் அருகில் நின்றவர்கள் காயம் அடைந்தனர்.

5 பேர் காயம்

தகவல் அறிந்து உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்த 5 பேரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெட்ரோல் டேங்கர் லாரியை ராட்சத கிரேன்களை பயன்படுத்தி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தால் மும்பை – புனே நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story