போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதபோதும் பா.ஜனதாவினர் புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி


போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதபோதும் பா.ஜனதாவினர் புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி
x
தினத்தந்தி 7 Aug 2017 3:53 AM IST (Updated: 7 Aug 2017 3:53 AM IST)
t-max-icont-min-icon

போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதபோதும் பா.ஜனதாவினர் புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக

மும்பை,

போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதபோதும் பா.ஜனதாவினர் புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் மந்திரி அப்துல் சாத்தர் குற்றம்சாட்டி உள்ளார்.

13 கல்லூரிகளுக்கு அனுமதி

முன்னாள் காங்கிரஸ் மாநில மந்திரி அப்துல் சாத்தர் மும்பை ஐகோர்ட்டின், மும்பை மற்றும் அவுரங்காபாத் அமர்வில் தனித்தனியே 2 பொது நலன் மனுக்களை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் அவர், ‘‘ மராட்டியத்தில் பா.ஜனதா தலைவர்களுக்கு சொந்தமாக அல்லது அவர்களின் கட்டுபாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத போதும் விதிமுறைகளை மீறி புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என கூறி பல்கலைக்கழக கமிட்டியினரால் நிராகரிக்கப்பட்ட போதிலும் கடந்த 2016–ம் ஆண்டு ஆகஸ்ட் 15–ந் தேதி பா.ஜனதாவினர் தொடர்புடையவர்களுக்கு மொத்தம் 13 கல்லூரிகள் தொடங்க மாநில உயர்கல்வி துறையால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ராவ்சாகிப் தன்வே

மாநில பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே கட்டுபாட்டில் உள்ள சமர் சமிதியினர் நடத்தும் கல்வி நிறுவனத்திற்கும், மருத்துவகல்வித்துறை மந்திரி கிரிஷ் மகாஜனின் கட்டுபாட்டில் உள்ள ஜாம்னர், பண்டித் தீனதயாள் உபாதய் கல்வி நிறுவனத்திற்கும், அகோலா பா.ஜனதா தலைவர் கோவர்தன் சர்மா கட்டுபாட்டில் உள்ள ஆனந்த் மகாராஜ் கிரிதா மண்டல் கல்வி நிலையத்திற்கும் புதிய கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது ’’ என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அப்துல் சாத்தர் கூறும்போது:–

ராவ்சாகேப் தன்வேயின் கட்டுபாட்டில் உள்ள கல்வி நிறுவனத்தில் புதிய கல்லூரி தொடங்க போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனினும் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி புதிய கல்லூரி தொடங்க மாநில அரசின் ஒப்புதல் பெற்றுள்ளார். எங்கள் மனு விசாரணைக்கு வந்த பிறகு பா.ஜனதாவினர் சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டதை நிரூபிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story