மராட்டிய தொழிலாளர் வாரியத்தில் நிதி குழப்பம் பொது கணக்கு கமிட்டி அறிக்கையில் தகவல்
மராட்டிய தொழிலாளர் வாரியத்தில் நிதி குழப்பம் நிலவுவதாக பொது கணக்கு கமிட்டி சட்டசபையில் அறிக்கை தாக்கல் செய்தது.
மும்பை,

அறிக்கை தாக்கல்
மாநில அரசின் பொது கணக்கு கமிட்டி அதன் அறிக்கையை நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்தது. அதில், மராட்டிய தொழிலாளர் வாரியத்தில் தவறான நிர்வாகத்தால் நிதி குழப்பம் நிலவுவதாக கூறப்பட்டிருக்கிறது. இதுபற்றி அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மராட்டிய கட்டிட மற்றும் பிற கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் ரூ.4 ஆயிரத்து 200 கோடி டெபாசிட் தொகையை தன்னகத்தே வைத்திருக்கிறது. இந்த நிதியில் இருந்து கிடைக்கும் வட்டியை வைத்தே அது செயல்படலாம். ஆனாலும், அங்கு நிர்வாக பிரச்சினை தீவிரமாக இருக்கிறது. வாரியத்தின் வரவு- செலவு கணக்கு பற்றி ஆவணங்கள் இல்லை. ஆகையால், அதன் ஆண்டு அறிக்கையை தணிக்கை செய்வது மிகவும் கடினம்.
மடிக்கணினிகள்
ஒவ்வொரு ஆண்டும் அதன் பட்ஜெட் திட்டங்களை மாநில அரசிடம் தொழிலாளர் வாரியம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இதுநாள் வரை சமர்ப்பிக்கவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரியில் மாநில அரசு ரூ.23 லட்சத்து 80 ஆயிரம் செலவில் 50 மடிக்கணினிகளை வாங்கியது. இதில், ஒன்றை கூட வினியோகிக்கவில்லை. பல்வேறு திட்டங்களின் கணக்கு விவரங்களை தணிக்கை செய்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்வதாக தொழிலாளர் வாரியம் உறுதியளித்திருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story