என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு 340 ஆராய்ச்சியாளர் பணிகள்


என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு 340 ஆராய்ச்சியாளர் பணிகள்
x
தினத்தந்தி 7 Aug 2017 3:12 PM IST (Updated: 7 Aug 2017 3:11 PM IST)
t-max-icont-min-icon

மத்திய தகவல் தொழில்நுட்ப மையத்தில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு 340 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மையம் சுருக்கமாக என்.ஐ.இ.எல்.ஐ.டி (NIELIT) என்ற அழைக்கப்படுகிறது. புது டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் ஆராய்ச்சியாளர் (குரூப்-ஏ), தொழில்நுட்ப ஆராய்ச்சி உதவியாளர் (குரூப்- பி) பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 340 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஆராய்ச்சியாளர் பணிக்கு 81 இடங்களும், தொழில்நுட்ப ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு 259 இடங் களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்.

வயது வரம்பு :


விண்ணப்பதாரர்கள் 28-8-2017-ந் தேதி 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டு களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேசன், போன்ற பி.இ., பி.டெக் பட்டப்படிப்பு படித்தவர்கள், எம்.எஸ்சி. இயற்பியல், எம்.எஸ்சி. எலக்ட்ரானிக்ஸ், அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ், எம்.சி.ஏ., எம்.எஸ். படித்தவர்களுக்கும் பணிகள் உள்ளன.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு மட்டும் நடை பெறும்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.800 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 28-8-2017-ந் தேதியாகும். தேவையான இடத்தில் புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். பின்னர் பிற்கால உபயோகத்திற்காக பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப்பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரத்தை தெரிந்து கொள்ளவும் delhi.nielit.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Next Story