ஆதம்பாக்கத்தில் பரபரப்பு வட மாநில பெண் கத்தி முனையில் கற்பழிப்பு


ஆதம்பாக்கத்தில் பரபரப்பு வட மாநில பெண் கத்தி முனையில் கற்பழிப்பு
x
தினத்தந்தி 7 Aug 2017 11:00 PM GMT (Updated: 2017-08-08T00:20:35+05:30)

ஆதம்பாக்கத்தில் வட மாநில பெண்ணை கத்தி முனையில் மிரட்டி கற்பழித்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பெரியார் நகர் 9–வது தெருவில், மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பல்லாவரத்தை அடுத்த பம்மலில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை அந்த பெண் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி ஒருவர் அந்த பெண்ணின் வீட்டுக்குள் நைசாக நுழைந்தார்.

பின்னர் அந்த மர்ம ஆசாமி தூங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். இதில், திடுக்கிட்டு எழுந்த அந்த பெண் தனக்கு அருகில் ஒரு ஆண் அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

பின்னர் அந்த பெண் சத்தம் போட முற்பட்டார். ஆனால் அந்த மர்ம ஆசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி ‘சத்தம் போட்டால் குத்தி கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டினார்.

இதில் பயந்துபோன அந்த பெண் உயிரை காப்பாற்றிக்கொள்ள சத்தம் போடாமல் இருந்தார். இதனை பயன்படுத்தி அந்த மர்ம ஆசாமி அந்த பெண்ணை கற்பழித்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து, ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்திமுனையில் பெண்ணை கற்பழித்துவிட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும், அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story