குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையிலிருந்து கூடுதலாக 100 கனஅடி தண்ணீர் திறக்க நடவடிக்கை


குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையிலிருந்து கூடுதலாக 100 கனஅடி தண்ணீர் திறக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Aug 2017 4:30 AM IST (Updated: 8 Aug 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையிலிருந்து கூடுதலாக 100 கனஅடி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, கலெக்டர் வெங்கடேஷ் கூறினார்.

தூத்துக்குடி,

தமிழ்நாட்டில் 140 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தற்போது வறட்சி நிலவி வருகிறது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மாவட்ட குடிநீர் தேவைக்காக, கடந்த 10 நாட்களாக பாபநாசம் அணையில் இருந்து கூடுதலாக 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் தற்போது குறைக்கப்பட்டு விட்டது.

இதனால் மீண்டும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. ஆகையால் மீண்டும் கூடுதலாக 100 கனஅடி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 7 வட்டாரங்களில் முழுமையாக கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறையில் பணியாற்றி வந்த 16 அலுவலக உதவியாளர்களுக்கு பதிவுரு எழுத்தராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. அதற்கான ஆணையை கலெக்டர் நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர்(பயிற்சி) சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராஜையா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story