மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்


மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்
x
தினத்தந்தி 8 Aug 2017 4:15 AM IST (Updated: 8 Aug 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள்குறைத் தீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி வழங்கினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளிடமும், கூட்ட அரங்கில் பொதுமக்களிடமும் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக் கடன், திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 492 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்களிடம் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கி, மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்கள், 30 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் மற்றும் 5 மாற்றுத்திறனாகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.


Related Tags :
Next Story