நாகை மாவட்டத்தில் உள்ள குளங்களை தூர்வார வேண்டும்
நாகை மாவட்டத்தில் உள்ள குளங்களை தூர்வார வேண்டும் என பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருமருகல்,
திருமருகலில் பா.ஜ.க. நாகை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் நேதாஜி தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் வேதரெத்தினம், புரட்சி கவிதாசன், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட கோட்டப்பொறுப்பாளர் வரதராஜன், மாநில கல்வியாளர் அணி செயலாளர் கார்த்திகேயன், மாவட்டத் துணைத்தலைவர்கள் வீரமணி, வக்கீல் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு பேசினார்.
குடிநீர் தட்டுப்பாடு
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நாகை மாவட்டத்தில் உள்ள குளங்களை தூர்வார வேண்டும். வேதாரண்யம் ஒன்றியம் நடு வாய்க்கால் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஆதலால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். பிளாஸ்டிக்பொருட்களை நிரந்தரமாக தடை செய்து நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமருகல் சந்தை பேட்டைப்பகுதியில் கோவில் நிலத்தில் தீமிதி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்த தி.க.வினரை தட்டிக் கேட்ட நாகை தெற்கு மாவட்ட தலைவர் நேதாஜி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் 20 பேர் மீது பொய் வழக்குப் போட்ட திட்டச்சேரி போலீசாரை கண்டிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளாகள் ஜீவாமோகன், ராஜேந்திரகுமார், வக்கீல் அணி மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருமருகல் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சத்தியவிஜயன் வரவேற்றார். முடிவில் ஒன்றிய பொதுச்செயலாளர் அனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story