குடிபோதையில் வாகனம் ஓட்டிய 380 பேர் மீது வழக்கு ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை
திருச்சி மாநகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 380 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களது ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி மாநகரில் நடைபெறும் விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், மது அருந்திவிட்டு அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும், அவர்களுடைய ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து கடந்த 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை திருச்சி மாநகர பகுதியில் சிறப்புக்குழுக்களை கொண்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
380 பேர் மீது வழக்கு
இந்த சிறப்பு வாகன சோதனையின்போது, குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 380 பேரை கண்டறிந்து, அவர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டினார்களா? என்று பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், மேற்படி நபர்கள் குடிபோதையில் இருந்ததாக மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கினார்கள். இதையடுத்து அவர்கள் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்கள் ஓட்டி வந்த 265 இருசக்கர வாகனங்கள், 46 மூன்று சக்கர வாகனங்கள், 69 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 380 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஓட்டுனர் உரிமம் ரத்து
மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 380 பேரில், 106 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 274 பேரின் ஓட்டுனர் உரிமங்களையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் நபர்களின் மீது இதுபோன்ற வாகன சோதனை தொடர்ந்து நடைபெறும். அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story