மானியத்தை ரத்து செய்யும் திட்டத்தை கைவிடக்கோரி சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்


மானியத்தை ரத்து செய்யும் திட்டத்தை கைவிடக்கோரி சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Aug 2017 4:30 AM IST (Updated: 8 Aug 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

மானியத்தை ரத்து செய்யும் திட்டத்தை கைவிடக்கோரி கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி,

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், கியாஸ் மானியத்தை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று இந்திய தேசிய மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் மாலா பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாஸ்கரவள்ளி, ஒன்றிய தலைவர் வனிதாதேவி, நகர செயலாளர் மீனாம்பிகா, நகர தலைவர் மல்லிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், கியாஸ் சிலிண்டரின் விலையை மாதந்தோறும் உயர்த்துவது, மானியத்தை ரத்து செய்வது உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். 

Next Story