மழையை தடுக்கும் தைல மரங்களை அகற்ற வேண்டும் கலெக்டரிடம் மனு
மழையை தடுக்கும் தைல மரங்களை அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில், ஆவுடையார்கோவில் தாலுகா களபம் கிராம விவசாயிகள் கொடுத்த மனுவில், களபம் வருவாய் கிராமத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், நெல் பயிர் செய்த விவசாயிகளுக்கும் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து பயிர் சேத காப்பீடு சம்பந்தமாக அடம்பூர் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 4-ந் தேதி ஒரு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த பட்டியலில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அதிகாரி, ஒன்றிய விவசாய அதிகாரி ஆகியோர் பரிந்துரைக்கு மாறாக குறைவான சதவீதம் பயிர் காப்பீடு வழங்க குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி 75 சதவீதம் காப்பீடு வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
தைலமரங்களை அகற்றும் போராட்டம்
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருவாரியான பகுதிகள் வானம் பார்த்த பூமியாக உள்ளன. மழையை நம்பியே விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மழையை தடுக்கும் தைலமரங்கள் அரசு மற்றும் தனியார் இடங்களில் மாவட்டம் முழுவதும சுமார் 40 ஆயிரம் எக்டேர் நடப்பட்டு உள்ளது. தைலமரங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் மழை பெய்யும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளதோடு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, உணவு உற்பத்தி முற்றிலும் குறைந்து பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையின் அளவை அதிகரிக்க மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் இடங்களில் உள்ள தைல மரங்களை அகற்றிவிட்டு வேறு இயற்கை வளங்களை அதிகரிக்கின்ற பயனுள்ள மரங்களை நடவேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம், வேளாண்மைத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் சார்பில் மக்களை திரட்டி தைலமரங்களை அகற்றும் போராட்டம் நடத்தப்படும்
என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மாற்றுத்திறனாளி சான்றிதழ்
கூட்டத்தில் பொன்னமராவதி தாலுகா வார்பட்டு அருகே உள்ள சின்னவார்குளம் அம்பலம் கொடுத்த மனுவில், நான் விவசாய கூலி தொழிலாளி. எனது மகன் ராஜன் என்பவர் சிவகங்கை மாவட்டம் செல்லியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு பிறப்பில் இருந்தே வலது கண் பார்வையில்லை. எதை பார்க்க வேண்டுமானலும் இடது கண்ணை கொண்டுதான் பார்க்க வேண்டி உள்ளது. இதனால் எனது மகனுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் மற்றும் அரசின் சலுகைகள் கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

Related Tags :
Next Story