விபத்தில் இறந்த கல்லூரி மாணவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் இறந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்து அரியலூர் கோர்ட்டு ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தாமரைக்குளம்,
அரியலூர் மாவட்டம் திருமழபாடி அருகேயுள்ள கண்டராதித்தம் மேட்டுதெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் இளவரசன் (வயது 21). இவர், பள்ளி அக்ரகாரத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 7.8.2014 அன்று, கல்லூரி முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த அரசு பஸ் இளவரசன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இளவரசன் உயிரிழந்தார்.
இழப்பீடு கேட்டு வழக்கு
தனது மகனின் இறப்பிற்கு உரிய இழப்பீடு கேட்டு பால்ராஜ் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விபத்தில் உயிரிழந்த இளவரசன் குடும்பத்தினருக்கு ரூ.8 லட்சத்து 94 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்துக்கு நீதிமன்றம் கடந்த 25.4.2016 அன்று உத்தரவிட்டது.
அரசு பஸ் ஜப்தி
ஆனால் இழப்பீடு வழங்கப்படாததால், பால்ராஜ் கடந்த 17.10.2016 அன்று நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி, பால்ராஜ் குடும்பத்தினருக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.10 லட்சத்து 64 ஆயிரத்து 810 இழப்பீடு தொகையை உடனடியாக வழங்குமாறு உத்தரவிட்டார். மேலும் இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பதால் அரியலூருக்கு வரும் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து அரியலூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதனால் அந்த பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.

Related Tags :
Next Story