சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது கேரள சுற்றுலா பயணிகள் உள்பட 4 பேர் படுகாயம்


சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது கேரள சுற்றுலா பயணிகள் உள்பட 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Aug 2017 11:00 PM GMT (Updated: 2017-08-08T02:37:42+05:30)

கன்னியாகுமரியில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் கேரள சுற்றுலா பயணிகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மயிலக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் ரதீஷ் (வயது30), அனீஷ் (28), அஜீர் (30). இவர்கள் 3 பேரும் கன்னியாகுமரியை சுற்றி பார்க்க சொகுசு காரில் வந்தனர்.

 கன்னியாகுமரிக்கு வந்த அவர்கள் மாதவபுரத்தை சேர்ந்த அலெக்ஸ் (54) என்ற சுற்றுலா வழிகாட்டியையும் தங்களுக்கு உதவியாக அழைத்து கொண்டு சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரியில் பல இடங்களை சுற்று பார்த்தனர். பின்னர், நள்ளிரவு 12.30 மணிக்கு கடற்கரையில் உள்ள சன்செட் பாயிண்ட் பகுதிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து காரில் திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது, கார் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், காரில் இருந்த 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 4 பேரையும் மீட்டு ஆம்புலன்சு மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story