மந்திரி டி.கே.சிவக்குமார் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பெங்களூரு,
மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. இந்த சோதனையை காங்கிரஸ் அரசியல் ஆக்குகிறது. வருமான வரி சோதனை நடந்த உடனேயே டி.கே.சிவக்குமார் மந்திரி பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். இதை அவர் செய்யவில்லை. எங்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது.
மந்திரி டி.கே.சிவக்குமார் உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். இந்த வருமான வரி சோதனையால் காங்கிரசுக்கு அரசியல் ரீதியாக ஆதாயம் கிடைக்கும் என்று சொல்வது தவறு. வரி ஏய்ப்பு செய்பவர்களின் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள். அவர்கள் சட்டப்படி இதை செய்கிறார்கள். இதில் அரசியலை தொடர்புபடுத்தி பேசுவது சரியல்ல.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
Related Tags :
Next Story