வேலூரில் தாய்பால் வாரவிழா விழிப்புணர்வு ஊர்வலம்
தாய்ப்பால் வார விழாவையொட்டி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி நர்சிங் மாணவிகள், சி.எம்.சி. நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வேலூர்,
தாய்ப்பால் வார விழாவையொட்டி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி நர்சிங் மாணவிகள், சி.எம்.சி. நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கிரீன் சர்க்கிள் வரை சென்றது. இதில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ், நலம் மருத்துவமனை டாக்டர் நர்மதாஅசோக், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் பாஸ்கர், சி.எம்.சி. இயக்குனர் சுனில்சாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story