வேலூர் அரசு மருத்துவமனையில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் வினியோகம்


வேலூர் அரசு மருத்துவமனையில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் வினியோகம்
x
தினத்தந்தி 8 Aug 2017 4:39 AM IST (Updated: 8 Aug 2017 4:39 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அரசு மருத்துவமனையில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது.

அடுக்கம்பாறை,

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பி.பிடி, பி.அசல்ப், பி.எஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி. கார்டியோ டெக்னாலஜி, பி.ஓடி, பி.ஆப்தம் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் நேற்று தொடங்கியது. இதனை மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் பாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் மணிமேகலை, அலுவலக கண்காணிப்பாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘வருகிற 23–ந் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். எஸ்.சி, எஸ்.டி பிரிவை சேர்ந்த மாணவர்கள் தங்கள் சாதிசான்றிதழை கொடுத்து இலவசமாகவும், பொதுப்பிரிவை சேர்ந்த மாணவர்கள் ரூ.400–க்கான வரைவோலையையும் கொடுத்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 24–ந் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்’’ என்றனர்.

விண்ணப்பங்கள் வாங்குவதற்காக நேற்று காலை 6 மணி முதலில் இருந்தே ஏராளமானோர் குவிந்த வண்ணம் இருந்தனர். விண்ணப்பங்கள் வினியோகம் தொடங்கியதும் வரைவோலை எடுப்பதற்காக அங்குள்ள வங்கி கிளையிலும் கூட்டம் குவிந்தது. அப்போது அங்குள்ள கணினியில் பழுது ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் நீண்ட நேரத்திற்கு பிறகு வரைவோலையை பெற்றுச்சென்றனர்.

முதல் நாளான நேற்று மட்டும் 1,232 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளது.


Next Story