கிணறு விவகாரம்: ஓ.பி.எஸ்.க்கு எதிராக வீடுகளில் கிராம மக்கள் கருப்பு கொடி போராட்டம்


கிணறு விவகாரம்: ஓ.பி.எஸ்.க்கு எதிராக வீடுகளில் கிராம மக்கள் கருப்பு கொடி போராட்டம்
x
தினத்தந்தி 8 Aug 2017 6:18 AM GMT (Updated: 2017-08-08T12:10:47+05:30)

ஓ.பி.எஸ்.சை கண்டித்து பெரியகுளம் லட்சுமிபுரம் கிராம மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெரியகுளம்,


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். தோட்டத்தில் உள்ள ராட்சத கிணறை பொதுமக்களுக்கு வழங்க கோரி தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

ஓ.பி.எஸ். தரப்பில் கிணறை பொதுமக்களுக்கு வழங்க எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டாலும் அது குறித்த எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடவில்லை என பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

கடந்த 2 நாட்களாக மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லட்சுமிபுரம் கிராம மக்கள் அனைவரும் தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏற்றியுள்ளனர். கிணறை ஓ.பி.எஸ். எங்களுக்கு வழங்கும் வரை பல வித போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

அதன் ஒரு பகுதியாக எங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

Next Story