மூளைக்கு துணை புரியும் ‘சிப்’


மூளைக்கு துணை புரியும் ‘சிப்’
x
தினத்தந்தி 8 Aug 2017 7:36 AM GMT (Updated: 2017-08-08T13:06:35+05:30)

இந்த சிப்பை, கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர்.

ல்சீமர் மற்றும் பார்க்கின்ஸன் போன்ற நோய் பாதிப்பு உடையவர்கள் பெரும்பாலான விஷயங்களில் சுய கட்டுப்பாடின்றி செயல்படுவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாகவும், அவர்களின் மூளையைத் தூண்டி செயல்திறனை அதிகப்படுத்தவும் சிறிய பொத்தான் வடிவ ‘சிப்’ உருவாக்கப்பட்டுள்ளது. சிர்கோனியா எனப்படும் ஒருவகை பீங்கான் பொருளால் ஆனது இந்த பொத்தான். இதை மண்டை ஓட்டினுள் பொருத்திக் கொண்டால், அல்ட்ராசவுண்ட் மூலம் இதை தொடர்பு கொண்டு சிகிச்சை அளிக்கலாம்.

மேலும் சிறப்பம்சமாக புற்றுநோய் செல்களை அழிக்கவும், பக்க வாதத்தை உருவாக்கும் ரத்தக்கட்டிகளை சிதைக்கவும் இதை பயன்படுத்தலாம். ‘இட்ரியா ஸ்டெபிலைஸ்டு சிர்கோனியா’ (YSZ), எனப்படும் இந்த சிப்பை, கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். மூளையை தொடர்புகொள்ளும் ஜன்னலாக இது விளங்கப்போகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மண்டை ஓடு அல்ட்ராசவுண்ட் ஒலிஅலைகளை கிரகித்துக் கொள்ளும் அல்லது பிரதிபலிக்கும் தன்மைக்கு ஏற்ப, சிகிச்சையின் பலன் வேறுபடும் என்பது தற்போதைய நிலை. தொடர் ஆராய்ச்சிகளால் இந்த குறைபாடு களையப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது இந்த அற்புத சிப். 

Next Story