நெல்லை மாவட்டத்தில் 9,843 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு உள்ளது கலெக்டர் தகவல்


நெல்லை மாவட்டத்தில் 9,843 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு உள்ளது கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 Aug 2017 2:00 AM IST (Updated: 8 Aug 2017 6:09 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 843 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 843 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

தாலிக்கு தங்கம்

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அனைத்து தரப்பு மக்களையும் பயன்படும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டினார். அவர் பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் 10–ம் வகுப்பு படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கமும், ரூ.25 ஆயிரம் உதவி தொகையும், பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கமும், ரு.50 ஆயிரம் உதவி தொகையும் அறிவித்தார். இதை தொடர்ந்து பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

9,843 பெண்கள்

நெல்லை மாவட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் பட்டயப்படிப்பு படித்த 4 ஆயிரத்து 801 பேருக்கு 4 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. 10–ம் வகுப்பு படித்த 5 ஆயிரத்து 42 பேருக்கு 4 கிராம் தங்கம், ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது. மொத்தம் 9 ஆயிரத்து 843 பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தில் பெண்கள் கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. தகுதியான பெண்கள் சமூக நலத்துறை அலுவலரை அணுகி விண்ணப்பம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story