பழனி தனியார் விடுதி ஊழியர் கொலை: 2 பேர் கைது
பழனி தனியார் விடுதி ஊழியர் கொலை: டி.வி. மெக்கானிக் உள்பட 2 பேர் கைது விபசார அழகிக்கு வலைவீச்சு
பழனி,
பழனி பைபாஸ் ரோடு, சிறுவர் பூங்கா அருகே கடந்த 5–ந்தேதி 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் முகம் சிதைந்து, நிர்வாண நிலையில் கிடந்தது. இதுகுறித்து பழனி அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர் பழனி பஸ் நிலையம் அருகே தனியார் தங்கும் விடுதி ஊழியர் நாட்டுத்துரை (வயது 40) என்பது தெரிய வந்தது. மேலும் கொலை நடந்த அன்று வேலை முடிந்து தனது நண்பர்களான பழனி லட்சுமிபுரத்தை சேர்ந்த டி.வி மெக்கானிக் கார்த்திகேயன் (32), இடும்பன் கோவில் ரோடு, காந்தி நகரை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி நாகராஜன் (39), பழனி பஸ் நிலையம் அருகே உள்ள பாளையத்தை சேர்ந்த பாஸ்கர் (27) ஆகியோருக்காக ஒரு விபசார அழகியை அழைத்து கொண்டு பைபாஸ் ரோட்டில் உள்ள முள்காட்டிற்கு அவர் சென்றது தெரிய வந்தது. அங்கு விபசார அழகியுடன் மூவரும் உல்லாசமாக இருந்ததும், அதன் பின்னர் அந்த பெண்ணை மீண்டும் தங்கும் விடுதியில் தங்க வைக்க வேண்டுமென 3 பேரும் வற்புறுத்தி தகராறில் ஈடுபட்ட போது, நாட்டுத்துரையை அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடி விட் இந்த கொலை சம்பவம் தொடர்பாக கார்த்திகேயன், நாகராஜன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாஸ்கர் மற்றும் விபசார அழகியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.