சத்தியமங்கலத்தில் பவானி நதிநீர் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சத்தியமங்கலத்தில் பவானி நதிநீர் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2017 4:00 AM IST (Updated: 9 Aug 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

காகித ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பவானி ஆற்றில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பவானி நதிநீர் பாதுகாப்பு இயக்கத்தினர் சத்தியமங்கலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள காகித ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பவானி ஆற்றில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பவானி நதிநீர் பாதுகாப்பு இயக்கத்தினர் சத்தியமங்கலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இயக்க தலைவர் கே.கே.சின்னதம்பி தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பு ரவிக்குமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் ஆதித்தமிழர் விடுதலை கட்சியின் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி, அரியப்பம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் இளங்கோ, வக்கீல் சரவணன், தமிழர் பண்பாட்டு கழக நிர்வாகி சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story