நடிகர் விஜய் ரசிகர்கள் மீது பத்திரிகை பெண் ஆசிரியர் புகார்


நடிகர் விஜய் ரசிகர்கள் மீது பத்திரிகை பெண் ஆசிரியர் புகார்
x
தினத்தந்தி 9 Aug 2017 4:30 AM IST (Updated: 9 Aug 2017 1:42 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் வசிப்பவர் தன்யா ராஜேந்திரன் இவர் இணையதள பத்திரிகை ஒன்றில் ஆசிரியராக உள்ளார். நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை,

நடிகர் விஜய் நடித்துள்ள சுறா படத்தை பார்த்தபோது, நான் இடைவேளையில் வெளியே வந்துவிட்டேன் என்றும் சமீபத்தில் ஷாருக்கான் நடித்துள்ள இந்தி படத்தை பார்த்தபோது இடைவேளை வரை கூட பார்க்க முடியவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் எனது கருத்தை பதிவு செய்திருந்தேன். இதையொட்டி விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான பேர் எனது புகைப்படத்துடன் ஆபாச தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதற்கு காரணமான குறிப்பிட்ட 5 பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளேன். இதுபோன்ற செயலுக்காக நடிகர் விஜய்யும் உரிய அறிவிப்பு வெளியிட்டு அவரது ரசிகர்கள் என்று சொல்பவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அவர் கொடுத்த புகார் மனு தொடர்பாக ‘சைபர் கிரைம்’ போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story