சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து நெரிசல் கமிஷனர் நேரிடையாக சென்று சரி செய்தார்


சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து நெரிசல் கமிஷனர் நேரிடையாக சென்று சரி செய்தார்
x
தினத்தந்தி 9 Aug 2017 4:15 AM IST (Updated: 9 Aug 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் பணிக்காக கடந்த 8.11.2011-ம் ஆண்டு முதல் ஈ.வெ.ரா. சாலை, ஈகா சந்திப்பு முதல் கெங்கு ரெட்டி சந்திப்பு வரையும், கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை மேயர் ராமநாதன் சாலை, சேத்துப்பட்டு சந்திப்பு, குருசாமி பாலம், ஈகா சந்திப்பு வரையும், போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது.

சென்னை,

தற்போது சென்னை மெட்ரோ ரெயில் பணி இப்பகுதியில் முடிவு பெற்றுள்ளதால் கடந்த 6.8.2017 முதல் மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து மாற்றத்தின் முதல் வேலை நாளான 7-ந்தேதி அன்று போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதால், போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பாக நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர் பெரியய்யா மற்றும் உயர் அதிகாரிகள் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சேத்துப்பட்டு பகுதியில், நேரிடையாக சென்று ஆய்வு செய்தார்கள். போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய சில அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து சேத்துப்பட்டு பகுதியில், நேற்று முதல் போக்குவரத்து நெரிசல் சீரானது.

மேற்கண்ட தகவல்கள் போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story