ஜவ்வரிசியில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை


ஜவ்வரிசியில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Aug 2017 4:15 AM IST (Updated: 9 Aug 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

ஜவ்வரிசியில் கலப்படம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆசியா மரியம் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜவ்வரிசி ஆலைகளில் மக்காச்சோள மாவு மற்றும் வேதிப்பொருட்களை கொண்டு ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் ஜவ்வரிசி ஆலைகளில் எவ்வித கலப்படமும் இல்லாமல் ஜவ்வரிசி தயாரிப்பதை உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு துறை அலுவலர்களை கொண்ட மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்காச்சோள மாவு மற்றும் வேதிப்பொருட்களை கொண்டு ஜவ்வரிசி உற்பத்தி செய்வதை தடுக்க பலதுறை அலுவலர்களை கொண்ட மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் போலீஸ் சூப்பிரண்டு, உதவி கலெக்டர், வணிக வரித்துறை இணை ஆணையர், தொழிற்சாலைகள் ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

கடுமையான நடவடிக்கை

கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜவ்வரிசி ஆலைகளில் மக்காச்சோள மாவு மற்றும் வேதிப்பொருட்களை கலந்து தயாரிப்பதை தடுப்பது குறித்து அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதில் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் உணவு மாதிரி எடுத்தல், கலப்பட பொருள் வைத்திருத்தல், வாகனம் மற்றும் ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்வது, பணியாளர்களுக்கு நோய் தொற்றில்லா தடை சான்று வழங்க வேண்டும்.

மேலும் காவல் துறை சார்பில் ஜவ்வரிசி ஆலைகளில் மக்காச்சோள மாவு மற்றும் ரசாயன கலப்படம் சம்பந்தமாக வரப்பெறும் புகார்களை பதிவு செய்தல் குறித்தும், மக்காச்சோள மாவு கலப்படம் செய்யும் தொழிற்சாலையில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சீர்செய்ய வேண்டும். ஜவ்வரிசி ஆலையில் குழந்தை தொழிலாளர் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஜவ்வரிசி ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் குறித்து அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஜவ்வரிசியில் கலப்படம் செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story