தெங்கம்புதூரில் கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை


தெங்கம்புதூரில் கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 9 Aug 2017 3:45 AM IST (Updated: 9 Aug 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

தெங்கம்புதூரில் கடன்தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

மேலகிருஷ்ணன்புதூர்,

சுசீந்திரம் போலீஸ் சரகம் தெங்கம்புதூர், கலெக்டர் காலனியை சேர்ந்தவர் மதுரைவீரன் (வயது42), கட்டிட தொழிலாளி. இவர் சமீபத்தில் புதிதாக வீடு கட்டினார். இதற்காக பலரிடம் கடன் வாங்கினார். பின்னர், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்கத்தொடங்கினர். ஆனால், அவரால் கொடுக்க முடியவில்லை. கடன் தொல்லையால் மதுரைவீரன் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை வீரன் வீட்டை உள்புறமாக பூட்டிவிட்டு தூக்கில் தொங்கினார்.

இதைப்பார்த்த அவரது மனைவி, அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று மதுரைவீரனை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மதுரை வீரன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 தற்கொலை செய்த மதுரைவீரனுக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.


Related Tags :
Next Story