வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான மனைகளை போலி பத்திரம் தயாரித்து விற்பனை


வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான மனைகளை போலி பத்திரம் தயாரித்து விற்பனை
x
தினத்தந்தி 9 Aug 2017 3:45 AM IST (Updated: 9 Aug 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

சத்துவாச்சாரியில் உள்ள வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான மனைகளை போலிபத்திரம் மூலம் விற்பனை செய்த நபர்கள்மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூர் சத்துவாச்சாரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்தப்பகுதியில் வீட்டு வசதிவாரியத்துக்கு சொந்தமான மனைகள் உள்ளன. இந்த வீட்டுமனைகள் குறித்து செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது சில மனைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள் சிலர் வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான மனைகளின் பெயரில் போலியாக பத்திரங்களை தயாரித்து அதை வேறு நபர்களுக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசில் புகார்

இது போன்று 7 மனைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில் 7 மனைகள் போலி பத்திரம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் போலி பத்திரம் தயாரித்தவர்கள் யார், மனைகள் யார் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. இதனால் ஊழியர்கள் யாருக்காவது இதில் தொடர்பிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story