அரியலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை முற்றிலும் அகற்ற வேண்டும்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை முற்றிலும் அகற்ற வேண்டும் என்று தே.மு.தி.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தாமரைக்குளம்,
அரியலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜெயவேல் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் கவியரசன், தெய்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் நகர செயலாளர் தாமஸ் ஏசுதாஸ் வரவேற்றார். கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை, வறுமை ஒழிப்பு தினமாக அனைத்து ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் கொண்டாடுவது, 20 ஆண்டுகளுக்கு மேலாக சீர்செய்யப்படாமல் குண்டும் குழியுமாக உள்ள ஏழேரி பிரிவு கருப்பிலாக்கட்டளையில் இருந்து கல்லக்குடி வரை உள்ள சாலையை சீர் செய்ய வேண்டும். சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்ட இடங்களிலும் மற்றும் ஏரி, குளங்களிலும் மரக்கன்றுகளை நட வேண்டும். பள்ளி மாணவர்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்கள் என சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்
அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை முற்றிலும் அகற்றப்பட வேண்டும். ஜெயங்கொண்டத்திருந்து சோழன்மாதேவி வழியாக அணைக்கரைக்கு இரவு நேரத்தில் பஸ்கள் இயக்க வேண்டும். அரியலூரில் இருந்து விக்கிரமங்கலம், ஸ்ரீபுரந்தான் வழியாக கும்பகோணத்திற்கு பள்ளி, கல்லூரி நேரங்களில் அதிக அளவு பஸ்கள் இயக்க வேண்டும். திருமானூர், தா.பழூர் பகுதிகளில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். திருமானூர் மற்றும் தா.பழூர் பகுதிகளை தலைமையிடமாக கொண்டு வருவாய் வட்டம் அமைக்க வேண்டும். அரியலூர் ரெயில் நிலையத்தில், அனைத்து விரைவு ரெயில்களும், சிறப்பு ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் திருமானூர் ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், ஜெகதீசன், தா.பழூர் ஒன்றிய செயலாளர் அறிவழகன், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் குமாரதேவன், செந்துறை ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஜெயங்கொண்டம் நகர செயலாளர் ரவி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story