பள்ளிக்கூட கழிவறையில் 4 வயது மாணவியை கற்பழித்த ஊழியர் கைது


பள்ளிக்கூட கழிவறையில் 4 வயது மாணவியை கற்பழித்த ஊழியர் கைது
x
தினத்தந்தி 9 Aug 2017 5:12 AM IST (Updated: 9 Aug 2017 5:12 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கூட கழிவறையில் 4 வயது மாணவியை கற்பழித்த ஊழியர் கைது செய்யப்பட்டார். மாணவர்களின் பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

மும்பை மலாடு கிழக்கு பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 4 வயது சிறுமி சம்பவத்தன்று கழிவறைக்கு சென்றிருக்கிறாள். அப்போது பள்ளியில் வேலை பார்த்து வரும் உதவியாளர் விஷால் என்பவர்

கழிவறைக்குள் நுழைந்து அச்சிறுமியை வாயை பொத்தி கற்பழித்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு வந்ததும் பெற்றோரிடம் சம்பவத்தை கூறினாள். இதை கேட்டு பதறி போன அவர்கள் தின்தோஷி போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை கற்பழித்த விஷாலை கைது செய்தனர்.

மேலும் சிறுமியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், நேற்று சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பெற்றோரின் போராட்டத்தில் அங்கு பரபரப்பு உண்டானது.

Next Story