செருப்பு செலவு மிச்சம்


செருப்பு செலவு மிச்சம்
x
தினத்தந்தி 11 Aug 2017 4:00 AM IST (Updated: 9 Aug 2017 3:39 PM IST)
t-max-icont-min-icon

நான் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமர். எனக்குப் பணப் பிரச்சினை இல்லை. என் விருப்பத்திற்காகவே ஷூ அணிவதில்லை.

றைய வைக்கும் குளிர் நிலவும் உக்ரைனில், வெறும் கால்களில் நடந்து வருகிறார், அண்ட்ரெஸ்ஜ் நோவோசியோ லோவ். கோடை காலத்தில் ஒரு நாள் வெறும் கால்களில் பனி மீது நடந்து பார்த்திருக்கிறார். கால்களுக்கு இதமாக இருந்ததாம். அன்று முதல் தினமும் சிறிது நேரம் ஷூக்கள் இன்றி, வெறும் கால்களுடன் நடந்து பழக ஆரம்பித்தார். ஒவ்வொரு நாளும் நடக்கும் நேரத்தை அதிகரிக்க, உறை பனியில் வெறும் காலுடன் நடப்பதே இவருக்கு வாடிக்கையாகிவிட்டது. ஷூக்களுடன் நடப்பதை விட வெற்றுக் கால்களில் நடப்பது பிடித்துவிட்டது. 

‘கடந்த 10 ஆண்டுகளாக நான் ஷூக்களோ, செருப்புகளோ வாங்கவே இல்லை. என் மனைவியும் குழந்தைகளும் முதலில் அதிர்ச்சியடைந்தனர். என்னுடன் நடந்து வரவே சங்கடப்பட்டனர். ஆரம்பத்தில் என்னைப் பலரும் வேடிக்கை பார்ப்பார்கள். இன்று எல்லோருக்கும் பழகிவிட்டது. என்னிடம் பணம் இல்லாததால்தான் ஷூ வாங்கவில்லை என்று நினைத்து, சிலர் ஷூக்களைக் கொடுத்திருக்கிறார்கள். நான் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமர். எனக்குப் பணப் பிரச்சினை இல்லை. என் விருப்பத்திற்காகவே ஷூ அணிவதில்லை என்று புரிய வைப்பேன். சமீப காலங்களாக பாதாளச் சுரங்கங்களில் செருப்பு இல்லாமல் நடப்பதற்கு காவலர்கள் அனுமதிப்பதில்லை. அதனால் ஒரு ஜோடி செருப்பு வாங்கி பையில் வைத்திருக்கிறேன். அனுமதிக்காத இடங்களில் மட்டும் பயன்படுத்திக்கொள் கிறேன்’ என்கிறார் நோவோசியோலோவ்.

Next Story