யூனியன், பஞ்சாயத்து அலுவலகத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகை


யூனியன், பஞ்சாயத்து அலுவலகத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 10 Aug 2017 2:30 AM IST (Updated: 9 Aug 2017 8:55 PM IST)
t-max-icont-min-icon

யூனியன், பஞ்சாயத்து அலுவலகத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

பாவூர்சத்திரம்,

யூனியன், பஞ்சாயத்து அலுவலகத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

யூனியன் அலுவலகம் முற்றுகை

பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் யூனியன் குலசேகரப்பட்டி பஞ்சாயத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் பாவூர்சத்திரம் வடக்கு பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்பிற்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதற்கு பதிலாக தாமிரபரணி தண்ணீர் மட்டும் பொது நல்லிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகமும் செய்யப்படாமல் உள்ளது. இதனால் குலசேகரப்பட்டி கிராம மக்கள் திரண்டு வந்து கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தை குடிநீர் கேட்டு முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தாமிரபரணி தண்ணீர் வரும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

பஞ்சாயத்து அலுவலகம்

இதுபோல் கணக்கநாடார்பட்டி கிராம மக்கள் அரியப்புரம் பஞ்சாயத்து அலுவலகத்தை குடிநீர் கேட்டு முற்றுகையிட்டனர். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story