காண்டூர் கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர் திருமூர்த்தி அணைக்கு வந்தது, விவசாயிகள் மகிழ்ச்சி
பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் திருமூர்த்தி அணையை வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தளி,
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்திஅணை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளை நீராதாரமாக கொண்ட இந்த அணைக்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும். அது தவிர பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாகவும் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வருகிறது.
அதன்படி பி.ஏ.பி. பாசன திட்டத்தின் மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. மேலும் திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பருவமழைகளின் தாக்கம் குறைந்துவிட்ட காரணத்தால் மேற்கு தொடர்ச்சி மலைகளில் வறட்சி நிலவி வந்தது. இதனால் அங்குள்ள சிற்றாறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக திருமூர்த்தி அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து முற்றிலுமாக நின்று போனது. இதன் காரணமாக அணையில் உள்ள குறைந்தபட்ச நீர்இருப்பை வைத்து சுற்றுப்புற கிராமங்களுக்கு குடிநீர்வினியோகம் நடைபெற்று வருகின்றது. அதேபோல் திருமூர்த்தி அணையின் முக்கிய நீராதாரமான பி.ஏ.பி. தொகுப்பு அணைகளிலும் வறட்சியின் காரணமாக நீர்இருப்பு குறைந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் மேற்குதொடர்ச்சி மலைகளில் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை அவ்வப்போது பெய்தது. இதன் காரணமாக அந்த அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு நீர்இருப்பும் படிப்படியாக உயர்ந்து வந்தது. இதைத்தொடர்ந்து பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். அதன்படி கடந்த 8-ந்தேதி மாலை காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீர் அடர்ந்த வனப்பகுதியின் வழியாக காண்டூர் கால்வாயில் வந்து திருமூர்த்தி அணையை வந்தடைந்தது.
மேலும் அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருமூர்த்தி அணையின் மொத்த உயரம் 60 அடி ஆகும். நேற்றைய நிலவரப்படி அணையில் 10.97 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.
அணையிலிருந்து வினாடிக்கு 24 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப் படுகிறது.

Related Tags :
Next Story